Sameera Begum


இவர் படித்த பள்ளியில் படிக்கும் போதே எதிர்காலத்தில் ஆசிரியர் ஆக வேண்டும் ஆசைப்பட்டார், காரணம்,  அவருக்கு கற்பித்த ஒரு ஆசிரியரின் கற்பிக்கும் திறனை பார்த்து அவரைப் போல நானும் ஆசிரியராகி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று ஆசைப்படவர், அதற்காக இளங்கலை பட்டம் பெற்று ஆசிரியர் பயிற்ச்சியும்(B.Sc B.Ed) முடித்தார். பின் தன் கல்லூரி பேராசிரியர் ஒருவரின் அறிவுருத்தலின் பேரில் இந்த பகுத்தறிவு பாட ஆராய்ச்சியில் ஆசிரியராக சேர்ந்தார். முதலில் இந்த பகுத்தறிவு பாடம் வித்தியாசமாகவும் மற்ற பாடங்களை போல் அல்லாமல் மாணவர்களுக்கு செயல்முறையில் வகுப்பை நடத்துவது இவருக்கு கடினமாகவும், புது அனுபபமாக இருத்தது என்கின்றார். இவர் பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும் முன்பு  பாடத்தினை தான் நன்றாக புரிந்துகொண்டு மாணவர்களுக்கு நடத்த முற்படுவதும், வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கேட்க்கும் படியாக பாடம் நடத்துவதும் இவருடைய தனித்த அடையாளமாக இவர் கருதுகின்றார். இவருக்கு கவிதை எழுதுவது மற்றும் வண்ணம் தீட்டுவது மற்றும், கைவினைப் பொருட்கள் வடிப்பது போன்றவற்றில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்.

Tamil