சிக்கல்களைத் தீர்க்கும் திறன் - பள்ளி மாணவர்களுக்கிடையேயான போட்டி


பள்ளி மாணவர்களுக்கு இடையே அவர்களின் நுண்ணறிவுத் திறன்களை வளர்க்கும் விதமாகவும், எதிர்காலத்தில் அவர்களை சுற்றி நடக்க இருக்கும் பல செயல்பாடுகளை மாற்றுச் சிந்தனையுடன் அனுகவும் அவர்களைஇப்போது இருந்தே தயார்படுத்திக் கொள்ளும் விதமாக இப்போட்டிகளை முன்னெடுக்கப் படுகிறது. இப்போட்டியானது கல்வி வட்டம், கல்வி மாவட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படும். ஒவ்வொரு அளவிலும் வெற்றி பெரும் மாணவர்கள் அடுத்த அளவில் இந்த போட்டியை தொடர்வார்கள், இப்படியாக கடைசி மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு இறுதிப்போட்டி நடத்தப்படும் அது தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். வெற்றி பெருபவர்களுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் பாராட்டு மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

இப்போட்டியில் மாணவர்கள் கலந்து கொள்ள தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பள்ளியின் சார்பில் அந்த மாணவரின் பெயரை தலைமை ஆசிரியர் பரிந்துரை செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 8 அக்டோபர் 2025

விண்ணப்பிக்க: பள்ளியின் தலைமை ஆசிரியரின் மூலம் விண்ணப்பிக்கவும்

Tamil