K.M.Almajitha


K.M. அல்மாஜிதா, இவர் சிறு வயதுமுதலே பள்ளியில் ஆசிரியராக வேண்டும் என்று ஆசை பட்டிருக்கிறார்.  அவருடைய ஆசை பகுத்தறிவு பாட ஆராய்ச்சியின் வாயிலாக பள்ளியில் ஆசிரியராக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் தழிலில் முதுகலை பட்டம்(M.A (Tamil)) பெற்றவர். அவர் இந்த வேலையை விரும்பியதற்கு காரணம் இது அவருக்கு மற்றவர்கள் மத்தியில் மதிப்பை பெற்றுத்தரக் கூடியதாகவும், அவருடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதாலும்,  அவர் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை மிகவும் விருப்பமான செயலாகவும், குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்கும் போது நாமும் குழந்தைகளிடம் இருந்து சிலவற்றை கற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கருதுவதாலும் தான்.  அல்மாஜிதா, வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனையை என்னால் சரி செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையையே அவருடைய பலமாக கருதுகின்றார். இந்த பகுத்தறிவு பாட ஆராய்ச்சியில் அவர் ஆசிரியராக இருப்பதை என்னி மகிழ்ச்சி அடைய முக்கியமாக காரணம், அவர் கற்றுக்கொடுக்கும் பாடத்தினை மாணவர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்றார்கள் என்பதாலும், மாணவர்களே அதை அவரிடம் கூறும் போதும் அவர் பெருமிதம் அடைவதாகவும் கூறுகின்றார்.

Tamil