Category: Blog

  • சில ஒப்பீடுகள் நன்மை பயக்கும், சிலவை பயக்காது

    நான் ஒவ்வொரு வாரமும் செயல்பாட்டுத் தாளினை (activity sheet) திருத்தி/ மதிப்பாய்வு செய்தபின் அடுத்த வகுப்பில் கொடுக்கும் பொழுது, சில மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்ணை மற்ற மாணவர்களின் மதிப்பெண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அடுத்த வகுப்பில் இதை விட அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று  தீர்மானித்துக் கொள்ளவதை பார்த்து இருக்கிறேன். ஆனால்  வேறு சில மாணவர்கள், தங்களுக்கு குறைந்த மதிப்பெண் தான்  கிடைத்திருக்கிறது என்று துவண்டு போவதையும் பார்த்து இருகிறேன். அப்போதெல்லாம் மிகவும் வருந்தி இருக்கிறேன்.  மாணவர்கள்…

  • கற்றதை வாழ்வில் பயன்படுத்தவில்லையெனில் கற்றதும் வீண்

    ஒரு வகுப்பில்  நான் “எல்லா இடைத் தொடர்புகளும் காரணத் தொடர்புகள் அல்ல “ (correlation is not  causation) என்ற பாடத்தை விலக்கிக் கொண்டிருந்தேன்.  மாணவர்களுக்கு சொல்லிக் கெடுக்கும் போது மாணவர்கள் இடைத்தொடர்பு மற்றும் காரண தொடர்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மிகவும் திருத்தமாகவும் அழகாகவும் கூறினார்கள். இருந்தாலும் செயல்பாட்டினை (activity sheet) செய்யும் போது அதே தலைப்பை  மையப்படுத்தி கேட்கபட்ட ஒரு குறிப்பிட்டக்  கேள்விக்கு பெரும்பாலான மாணவர்கள் தவறான பதில் கூறினார்கள். பிறகு  அந்த வகுப்பை…

  • ஒரு மாணவனின் மேம்பாடு ஒவ்வொரு மாணவனின் மேம்பாடு

    “முதல்  சில வகுப்புகளில் மாணவர்கள் சற்று  ஆர்வமில்லாமல்  (விறுவிறுப்பில்லாமல் இருந்தார்கள். அப்போது அந்த வகுப்பிற்கு ஒரு புது மாணவன் தந்தான். அவன் வகுப்பில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் சுறுசுறுப்பாக பதில்களைச் சொல்ல ஆரம்பித்தான், அதைக் பார்த்த மற்ற மாணவர்களும் அவனைத் தொடர்ந்து சுறுசுறுப்பாக பதில்களை கூற ஆரம்பித்தார்கள். இதில் இருந்து ஒரு வகுப்பில் அனைத்து மாணவர்களின் கவனத்தையும் நம்மால் ஈர்க்க முடியாவிட்டாலும், ஒரு சில மாணவர்களை விறுவிறுப்பாக வைத்திருந்தாலே மற்ற மாணவர்களும் அவர்களைப் பார்த்து  மிகவும் ஆர்வத்துடன்…

English