கற்றதை வாழ்வில் பயன்படுத்தவில்லையெனில் கற்றதும் வீண்


ஒரு வகுப்பில்  நான் “எல்லா இடைத் தொடர்புகளும் காரணத் தொடர்புகள் அல்ல “ (correlation is not  causation) என்ற பாடத்தை விலக்கிக் கொண்டிருந்தேன்.  மாணவர்களுக்கு சொல்லிக் கெடுக்கும் போது மாணவர்கள் இடைத்தொடர்பு மற்றும் காரண தொடர்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மிகவும் திருத்தமாகவும் அழகாகவும் கூறினார்கள். இருந்தாலும் செயல்பாட்டினை (activity sheet) செய்யும் போது அதே தலைப்பை  மையப்படுத்தி கேட்கபட்ட ஒரு குறிப்பிட்டக்  கேள்விக்கு பெரும்பாலான மாணவர்கள் தவறான பதில் கூறினார்கள்.

பிறகு  அந்த வகுப்பை நான் மறுபடியும் எடுத்தேன். அதில் கல்வி கற்பதின் ஒரு முக்கிய குறிக்கோளும் உத்தியுமான ‘கற்றதை  நடைமுறைப் படுத்துதல்’ (apply the concept) விசயத்தை எடுத்துக்காட்டுகளுடன் மீண்டும் வலியுறுத்தினேன். அதன் பிறகு செயல்பாட்டின் அந்த குறிப்பிட்ட கேள்விக்கு பெரும்பாலோர் சரியான விடை அளித்தனர். அனைவருக்கும் தெரிந்தது தான் இருப்பினும் ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால், பகுத்தாராயும் திறனை நாம் கற்றுக் கொண்டாள் மட்டும் போதாது.  அதை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல், நாம் அதை எளிதாக மறந்து விடுவதற்காகன வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தான் எங்களுடைய எல்லா பாடங்களிலும் செயல்பாடுகளாக இருந்ததாலும் சரி எடுத்துக்காட்டுகளாக இருந்தாலும் சரி அது அன்றாட வாழ்க்கையையும் சுற்று சூழலையும் மையப்படுத்தியதாக /சார்ந்ததாகத்தான் இருக்கும். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English