-
சமூகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு
Rama ஒருவர் திறம்பட பகுத்தறிவுடன் சிந்திக்க ஆரம்பித்தால் சமூகத்தில் மெல்ல மெல்ல பல மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு. நான் பகுத்தறிவு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து என் குடும்பத்தார் என்னிடம் பார்த்த முதல் மாற்றம், நான் பல இடங்களில் “அது”, “இது” என்று சொல்வதை விட்டு விட்டது தான். நாம் “அது”, “இது” என்று சொல்லுவோம், ஆனால் அந்த வார்த்தைகள் எதை குறிக்கிறது என்று நமக்கு தெரியாது. குறிப்பாக வாசிப்பது எப்படி என்று…
-
நான் ஒரு பகுத்தறிவு கருவி என்பதில் பெருமை கொள்கிறேன்
Udhayalakshmi பகுத்தாராய்வு திறன் வகுப்பு மூலமாக எந்த ஒரு சூழ்நிலையையும் எப்படி கையாள்வது எப்படி ஒரு சிறந்த முடிவு எடுப்பது. வாழ்க்கையில் சமூக வலைதளத்தில் நம்ம சுத்தி நடக்க கூடிய மோசடி-ல இருந்து நாம் எப்படி தற்காத்துக் கொள்வது எப்படி? பல கண்ணோட்டங்கள் நாம் எப்படி பாக்குறது ஒரு தகவலை கேள்விப் படும் போது அது உண்மையா பொய்யானு எப்படி கண்டுபிடிக்கிறது. இது போன்ற பல ஆற்றல்களை மாணவர்கள் கற்றுக் கொள்கின்றார்கள். பகுத்தாராய்வு பாடத்தை நான் படிக்கும்…
-
தனிமனித மாற்றம் சமூக மாற்றத்திற்கான அடித்தளம்
K.M. Almajitha நான் தகவல் சேகரிப்பு முறை தொடர்பான பாடத்தில், எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு அதற்கு தேவையான முழுமையான மற்றும் சரியான தகவல்களை சேகரிக்க வேண்டும், அறை குறையாக தகவல்களை சேகரித்தால் நாம் எடுக்கும் முடிவு தவறாக தான்…
-
புரிந்து கொண்டால் எல்லமே எளிது
Mahalakshmi நான் பகுத்தறிவு பாடத்திட்டத்திற்கான பயிற்சி எடுக்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று நினைத்த பகுதி தர்க்க பிழைகள். ஏனெனில் தர்க்க பிழைகள் பகுதி புரிந்து கொள்வதில் மிகவும் சிரமமாக இருந்தது. எனக்கு மட்டும் அல்ல என்னுடன் பயிற்சி பெற்ற அனைவருக்கும் புரிந்து கொள்வதில் சற்று சிரமம் இருப்பதை உணர்ந்தேன். உதாரணத்திற்கு பழமையானது எப்போதும் சிறப்பானதாக இருக்கும்(old is gold) என்று நாம் நினைப்போம், ஆனால் பழமையானது எப்போது சிறப்பாதனதாகவும் சரியானதாகவும் இருக்க வேண்டிய…
-
மாற்றத்திற்கான மாற்றுச் சிந்தனை வேண்டும்
K.M.Almajitha முடிவு எடுத்தல் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விஷயம். என்னுடைய வாழ்வில் பல முடிவுகள் தனிப்பட்ட முறையில் எடுத்து இருக்கின்றேன், அது என்னுடைய நிலையை மட்டும் கருத்தில் கொண்டு மட்டுமே எடுத்திருக்கின்றேன். ஆனால் இந்த பகுத்தறிவு பாடத்திட்டத்தில் ஆசிரியரான பின் நாம் எடுக்கக்கூடிய முடிவு மற்றவர்களிடத்தில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதையும், அவர்களை அது எப்படியெல்லாம் பாதிக்கும் என யோசித்து அதனை கருத்தில் கொண்டு தான் தற்போது என் முடிவு யாரையும் பாதிக்காமல், எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்…
-
இன்று ஒரு சுவாரசியமான நிகழ்வு பள்ளியில் நடந்தது
Sameera இன்று ஒரு சுவாரசியமான நிகழ்வு பள்ளியில் நடந்தது. நான் 8 –ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தகவல்களைத் தொகுப்பது மற்றும் கோர்வையாக சிந்திப்பது என்ற பாடத்தை நடத்தினேன். அதற்கான செயல்பாட்டில் பல வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதை வைத்து மாணவர்கள் குழுவாக அமர்ந்து கதைகளை உருவாக்குவார்கள். அந்தக் கதைகளில் எவ்வளவு தர்க்கம்(logic) இருக்கிறது என்பதை மற்ற மாணவர்கள் சொல்வார்கள். ஒரு வேலை கதை இப்படி இருந்து இருக்கலமோ அப்படி இருந்து இருக்கலாமோ என்று விவாதிப்பார்கள். இந்த செயல்பாடுகளை மாணவர்கள்…
-
சில ஒப்பீடுகள் நன்மை பயக்கும், சிலவை பயக்காது
நான் ஒவ்வொரு வாரமும் செயல்பாட்டுத் தாளினை (activity sheet) திருத்தி/ மதிப்பாய்வு செய்தபின் அடுத்த வகுப்பில் கொடுக்கும் பொழுது, சில மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்ணை மற்ற மாணவர்களின் மதிப்பெண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அடுத்த வகுப்பில் இதை விட அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளவதை பார்த்து இருக்கிறேன். ஆனால் வேறு சில மாணவர்கள், தங்களுக்கு குறைந்த மதிப்பெண் தான் கிடைத்திருக்கிறது என்று துவண்டு போவதையும் பார்த்து இருகிறேன். அப்போதெல்லாம் மிகவும் வருந்தி இருக்கிறேன். மாணவர்கள்…
-
கற்றதை வாழ்வில் பயன்படுத்தவில்லையெனில் கற்றதும் வீண்
ஒரு வகுப்பில் நான் “எல்லா இடைத் தொடர்புகளும் காரணத் தொடர்புகள் அல்ல “ (correlation is not causation) என்ற பாடத்தை விலக்கிக் கொண்டிருந்தேன். மாணவர்களுக்கு சொல்லிக் கெடுக்கும் போது மாணவர்கள் இடைத்தொடர்பு மற்றும் காரண தொடர்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மிகவும் திருத்தமாகவும் அழகாகவும் கூறினார்கள். இருந்தாலும் செயல்பாட்டினை (activity sheet) செய்யும் போது அதே தலைப்பை மையப்படுத்தி கேட்கபட்ட ஒரு குறிப்பிட்டக் கேள்விக்கு பெரும்பாலான மாணவர்கள் தவறான பதில் கூறினார்கள். பிறகு அந்த வகுப்பை…
-
ஒரு மாணவனின் மேம்பாடு ஒவ்வொரு மாணவனின் மேம்பாடு
“முதல் சில வகுப்புகளில் மாணவர்கள் சற்று ஆர்வமில்லாமல் (விறுவிறுப்பில்லாமல் இருந்தார்கள். அப்போது அந்த வகுப்பிற்கு ஒரு புது மாணவன் தந்தான். அவன் வகுப்பில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் சுறுசுறுப்பாக பதில்களைச் சொல்ல ஆரம்பித்தான், அதைக் பார்த்த மற்ற மாணவர்களும் அவனைத் தொடர்ந்து சுறுசுறுப்பாக பதில்களை கூற ஆரம்பித்தார்கள். இதில் இருந்து ஒரு வகுப்பில் அனைத்து மாணவர்களின் கவனத்தையும் நம்மால் ஈர்க்க முடியாவிட்டாலும், ஒரு சில மாணவர்களை விறுவிறுப்பாக வைத்திருந்தாலே மற்ற மாணவர்களும் அவர்களைப் பார்த்து மிகவும் ஆர்வத்துடன்…

